இலட்சார்ச்சனை என்றால் என்ன?
கடவுளின் திருநாமத்தை நூற்றெட்டு முறை சொல்லி அர்ச்சிப்பது அஷ்டோத்திர சதநாம அர்ச்சனை. ஆயிரம் முறை சொல்லிச் செய்வது சகஸ்ரநாம அர்ச்சனை. சகஸ்ர நாமத்தை நூறுமுறை சொல்லி அர்ச்சித்தால் லட்சம் கணக்கு வரும். இதுவே ‘இலட்சார்ச்சனை’ எனப்படும். ஆயிரம், லட்சம், கோடி என்ற கணக்கில் நாமங்களைச் சொல்லி அர்ச்சனை செய்தால் பாவம் நீங்கி புண்ணியம் உண்டாகும் உலகத்திற்கே நன்மை உண்டாகும்.
எமது ஆலயத்தில் இலட்சார்ச்சனை தொடர்ந்து 10 நாட்கள் அர்ச்சனை இடம்பெற்று, இறுதி நாளில் விஷேட ஹோம வழிபாடுகள் இடம்பெறும்.
ஹோமம் முடிந்து ஒரிரு நாட்கள் கடந்து அக்னியின் வெப்பம் தணிந்ததும், ஹோம குண்டத்திலிருந்து பெறப்படும் திருநீறு (விபூதி) அல்லது ரக்ஷையை நெற்றியில் அணிந்து கொண்டால் ஆன்மாவின் பாவம், திருஷ்டி, மற்றும் தீய சக்திகளை நீக்கி சிறப்பான வாழ்வு தரும்.
இலட்சார்ச்சனை செய்ய பயன்படும் இலைகள்
#மாதுளை: பெரும் புகழும் நற்பெயரும் சேரும்.
#அரச இலை: எதிரிகள் தரும் துன்பம் தொலையும். உயர் பதவியும், பதவியால் கீர்த்தியும் கிடைக்கும்.
#வில்வ இலை: சிவகடாட்சம், சுகமான வாழ்வு, இன்பம் மற்றும் விரும்பியவை அனைத்தும் கிடைக்கும்.
#நொச்சி இலை: ஆரோக்கியம் மற்றும் ஆன்மீக பலன்களைத் தரும்.
#நெல்லி இலை: மகாலட்சுமி திருவருட்கடாட்சம், மாங்கல்ய பாக்கியம், நிலையான வருமானம் மற்றும் பிதுர் தோஷ நிவர்த்தி தரும்
#முல்லை இலை: அறம் வளரும்.
#கரிசலாங்கண்ணி: வாழ்க்கைக்குத் தேவையான பொருள் சேரும்.
#அருகம்புல்: அனைத்து சௌபாக்கியங்களும் உண்டாகும்.
#இலந்தை இலை: கல்வியில் மேன்மையை அடையலாம்.
#ஊமத்தை: பெருந்தன்மை கைவரப் பெறும்.
#வன்னி இலை: பூவுலக வாழ்விலும், சொர்க்க வாழ்விலும் நன்மைகள் கிடைக்கும்.
#அரளி இலை: செய்யும் அனைத்து முயற்சியிலும் வெற்றி பெறலாம்.
#வெள்ளெருக்கு இலை: சவுபாக்கியமான வாழ்வு, கருவிலுள்ள சிசுவுக்கு பாதுகாப்பு கிடைக்கும்.
#நாயுருவி: முகப்பொலிவும் அழகும் கூடும்.
#கண்டங்கத்திரி: வீரமும், தைரியமும் உண்டாகும்.
#மருதம்: மகப்பேறு வாய்க்கும்.
#விஷ்ணுகிராந்தி: நுண்ணறிவு கைகூடும்.
#தேவதாரு: எதையும் தாங்கும் மனோ தைரியம் உண்டாகும்.
#மருக்கொழுந்து: இல்லற வாழ்வு சுகம் பெறும்.
#ஜாதிமல்லி: சொந்த வீடு, மனை, பூமி பாக்கியம் வாய்க்கும்.
#தாழம் இலை: செல்வச் செழிப்பு உண்டாகும்.
#அகத்தி: கடன் தொல்லையிலிருந்து விடுதலை பெறலாம்.
#தவனம் ஜகர் பூரஸ இலை: நல்ல கணவன் மனைவி அமையும்.



0 கருத்துகள்
வீரபத்திரர் பற்றிய கதைகள் உங்களது கட்டுரைகள் கவிதைகள் எமது இணையத்தளத்தில் வர விரும்பின் எமது Gmail முகவரிக்கு உங்கள் பெயரை இட்டு அனுப்பி வைக்கவும்.