பங்குனி உத்திரம் – முழுமையான சிறப்புகள் மற்றும் குலதெய்வ வழிபாடு
பங்குனி உத்திரம் என்பது தமிழ் மாதமான பங்குனியில் வரும் உத்திரம் நட்சத்திரத்துடன் இணையும் மிகப் புனிதமான நாள். இந்த நாள் “திருக்கல்யாண நாள்” என்றும் அழைக்கப்படுகிறது. பல தெய்வ திருமணங்கள் நடந்த தினம் என்பதால் ஆன்மீக ரீதியாக மிக உயர்ந்ததாக கருதப்படுகிறது.அந்தவகையில் 2026 ம் ஆண்டின் பங்குனி உத்திர நட்சத்திரம் 01/04/2026 அன்று இடம்பெறும்.
பங்குனி உத்திரம் நாளின் விரிவான சிறப்புகள்
தெய்வ திருமணங்களின் நாள்இந்த நாளில் பல தெய்வங்களின் திருமணங்கள் நடைபெற்றதாக புராணங்கள் கூறுகின்றன:
- முருகன் வள்ளி தெய்வானை திருக்கல்யாணம்
- மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம்
- ராமர் சீதா கல்யாணம்
இதனால் இந்த நாள் திருமண யோகம் பெறும் நாள் என்று நம்பப்படுகிறது.
இன்னும் பல சிறப்புக்களை கொண்டது இந்த பங்குனி உத்திர திருநாள்.
ஆன்மீக முக்கியத்துவம்
திருமண தடை நீங்க வேண்டி மக்கள் விரதம் இருந்து வழிபடுவர்கணவன்-மனைவி உறவு வலுப்படும்
குடும்பத்தில் அமைதி, ஒற்றுமை அதிகரிக்கும்
மனவிருப்பங்கள் நிறைவேறும்
விரதம் மற்றும் பக்தி வழிபாடு
அதிகாலை எழுந்து குளித்து சுத்தமாக இருக்க வேண்டும்முழு நாள் சைவ உணவு மட்டும் உட்கொள்ளலாம்
சிலர் பால், பழம் மட்டும் கொண்டு விரதம் இருப்பார்கள்
மாலை நேரத்தில் கோவில் தரிசனம் மிக முக்கியம்
காவடி மற்றும் முருகன் வழிபாடு
பக்தர்கள் இந்த நாளில் காவடி எடுப்பது வழக்கம்பால் காவடி, பூ காவடி, அலகு காவடி போன்றவை எடுத்துச் செல்கின்றனர்
இது விரத நிறைவு மற்றும் மனவிருப்ப நிவர்த்திக்கு செய்யப்படுகிறது
குலதெய்வ பூஜை வழிபாடு
குலதெய்வம் என்பது நம் குடும்பத்தை தலைமுறையாக காப்பாற்றும் தெய்வம்.குலம் தெரியாமல் போனாலும், குலதெய்வம் தெரியாமல் போகக்கூடாது. குருவை மறந்தாலும் குலதெய்வத்தை மறக்கக்கூடாது என்பது பழமொழிகள்.
குலதெய்வ கோவில்களான காவல் தெய்வங்கள் என அழைக்கப்படும் சாஸ்தா, அய்யனார், வீரபத்திரர், காளி கோவில்களுக்கு பங்குனி உத்திரத்தன்று சென்று வழிபடுவதை மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்த குலதெய்வ வழிபாட்டை கார்த்திகை மாதம் திருகார்த்திகையின்போதும், பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்றும் வழிபடுவார்கள்.
இதில் பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரத்தன்று குலதெய்வ வழிபாடு செய்வது மிகவும் சிறப்புக்குரியதாகும். அன்று பௌர்ணமி என்பதால் உகந்த நாளாகவும் அமைகிறது.
அன்றைய தினம் குலதெய்வத்தை வழிபட்டால் இரட்டிப்பு பலன் கிடைக்கும்.
குலதெய்வ கோவிலில் நல்லெண்ணெய் தீபமிட்டு வழிபட்டால் கோடி நன்மை தரும்.
பங்குனி மாத பௌர்ணமியில் குடும்பத்துடன் சென்று குலதெய்வத்தை தரிசித்து வாருங்கள். வழக்கமாக உங்கள் முன்னோர்களால் செய்யப்படும் பூஜைகள், அபிஷேகங்களை செய்து பொங்கல் இட்டு குடும்பத்தோடு ஒற்றுமையாக வழிபட்டால் புண்ணிய பலன்களோடு முன்னோர்களது ஆசியும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
வழிபாடு முடிந்ததும் அங்கேயே சமைத்து பந்தி போட்டு பரிமாறி வீடு திரும்புவதும், குலதெய்வத்தை திருப்திப்படுத்தும்.
பங்குனி உத்திரத்தன்று வெளியூரிலும், வெளிநாடுகளிலும் வசிப்பவர்கள் தவிர்க்க இயலாத காரணத்தினால் குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடியவில்லையென்றால் வீட்டின் பூஜையறையில் இருக்கும் குலதெய்வத்துக்கு படையல் இட்டு மனம் உருகி வழிபாடு செய்யலாம்.
குலம் சிறக்கவும், குடும்பம் மேன்மை பெறவும் குலதெய்வத்தை மகிழ்விக்க பங்குனி உத்திர நாளே நல்ல நாள்... ஒருவரது குலத்தை வழி வழியாக பாதுகாக்கும் வலிமையும், சக்தியும் குலதெய்வத்துக்கே உண்டு.
பங்குனி உத்திரத்தன்று குடும்பத்துடன் சென்று குலதெய்வத்தை பூஜை செய்து வழிபடுங்கள்....
இரட்டிப்பு பலன்களைப் பெற்று வளமாக வாழ்வீர்கள்.
பங்குனி உத்திரம் நாளில் கிடைக்கும் பலன்கள்
- திருமண தடை நீங்கும்
- குழந்தை பாக்கியம் கிடைக்கும்
- குடும்ப அமைதி, ஒற்றுமை
- தொழில் வளர்ச்சி
- பண வரவு அதிகரிப்பு
- மன அமைதி, ஆன்மீக முன்னேற்றம்

0 கருத்துகள்
வீரபத்திரர் பற்றிய கதைகள் உங்களது கட்டுரைகள் கவிதைகள் எமது இணையத்தளத்தில் வர விரும்பின் எமது Gmail முகவரிக்கு உங்கள் பெயரை இட்டு அனுப்பி வைக்கவும்.