-->

மானம்பூத்திருவிழா - வாழைவெட்டு

கல்வியங்காடு ஸ்ரீ பத்திரகாளி சமேத வீரபத்திரர் ஆலயத்தில் 19.10.2018 இடம்பெற்ற மானம்பூத்திருவிழா
மகிஷாசுரன் என்ற அசுரனை வதம் செய்த காரணத்தால் அம்பிகைக்கு மகிஷாசுர மர்தனி எனும் நாமம் வழங்கப்படுகிறது. 
முன்னொரு காலத்தில் மகிஷாசுரன் என்ற அசுரன் பிரம்ம தேவரை நோக்கி கடும் வரம் வேண்டினான். தனக்கு மனிதர்களாளும் மிருகங்களாலும் எவராலும் மரணம் நேரக்கூடாது என கேட்ட வரத்திற்கமைய பிரம்ம தேவரும் அவனுக்கு வரத்தை வழங்கினார். நான் சாகா வரம் பெற்று விட்டேன் என்ற அகங்காரத்தில் அவனது தீய செயல்களால் மக்கள் நிம்மதியிழந்து தவித்த போது பிரம்ம தேவரும் ஈசனும் ஏனைய தேவர்களும் ஒரு பெண்ணால் தான் மகிசனுக்கு மரணம் சம்பவிக்கும் என்று முடிவுக்கு வந்து துர்க்கையை வேண்டினார்கள். துர்க்கையும் சம்மதிக்க ஈசன், பிரம்ம தேவர், இந்திரன் மூவரும் தமது ஆயுதங்களை வழங்க அம்பிகை போரிற்கு சென்றாள். 9 நாட்களாக கடும் போர் இடம்பெற்று 10வது நாள் மகிசாசுரன் அம்பிகையால் வதம் செய்யப்பட்டான்.
 அம்பிகையானவள் துர்க்கை வடிவில் மகிஷனை வதம் செய்து மக்களை காப்பாற்றிய நாள் விஜயதசமி என்று கூறப்படுகின்றது. அதர்மத்தின் சின்னமாக விளங்கிய மகிஷாசுரனை அழித்தமையால் அன்னை பராசக்தி மகிஷாசுர மர்தனி என்ற பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது.
உலக சக்தியாக விளங்கும் அம்பிகையை நவராத்திரி நாட்களில் துர்க்கை, மகாலட்சுமி, சரஸ்வதியாக பாவனை செய்து வழிபாடு செய்கின்றோம். பத்தாம்நாள் விஜயதசமி என்று சொல்லப்படுகின்றது. இந்நாள் ஏடு தொடக்கம் உட்பட அனைத்து விதமான காரியங்களுக்கும் சித்தி தரும் நல்ல நாளாக பார்க்கப்படுகின்றது.
விஜயதசமி நாளில் கோவில்களில் மானம்பூ என்ற விழா நடைபெறுகின்றது. இதனை வாழை வெட்டு என்றும் கூறுவர். மகிஷாசுரன் துர்க்கையின் கோபத்தைத் தாங்க முடியாது வன்னி மரத்தில் ஒளிந்து கொண்டபோது அம்மன் அவனைத் தேடிச்சென்று வதம் செய்ததை இந்த மானம்பூ என்னும் வாழை வெட்டு நமக்கு நினைவு படுத்துகின்றது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்