கும்பாபிஷேக வாழ்த்துச் செய்தி
கல்வியங்காடு ஸ்ரீ பத்திரகாளி சமேத ஸ்ரீ வீரபத்திரர் தேவஸ்தான இராஜகோபுர கும்பாபிஷேக மலருக்கு வாழ்த்துரை வழங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன்.
எமது மனம், வாக்கு, காயத்திற்கு அப்பாற்பட்ட பெருமான் எமக்கு இரங்கி தடத்தநிலையில் எங்களுக்குப் புலனாகிக் கிட்டும் முறையை உபநிடதங்கள் சிறப்பாகக் கூறுகின்றன. இதைத் துணையாகக்கொண்டு அமைக்கப்பட்டதே பிரதிஷ்டை எனப்படும் கும்பாபிஷேகக் கிரியையாகும்.
"கோபுர தரிசனம் கோடி புண்ணியம்" என்ற ஆன்றோர் வாக்கிற்கிணங்க இவ் ஆலயத்தில் இராஜகோபுரம் நிர்மாணிக்கப்பட்டமை இக்கிராம மக்களின் வாழ்வு வளம் பெறுவதற்கு வழியமைத்துள்ளது. மனிதனை மனிதனாக மாற்றுவது இறை வழிபாடாகும். பிறத்தற்கரிய மானிடப்பிறப்பினைப் பெற்ற நாங்கள் இறை பணி யாற்றுவது இம்மைக்கும் மறுமைக்கும் புண்ணியத்தைத் தருவதாகும்.
இவ்வாலய கும்பாபிஷேகப் பணிகளில் முன்னின்று பணியாற்றிய ஆலய பரிபாலனசபையினர், சிவாச்சார்யார்கள், கல்வியங்காடு வாழ்மக்கள் அனைவருக்கும் இறைவனின் அருட்கடாட்சம் கிடைக்க வேண்டுமென்று வாழ்த்துகின்றேன்.
"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்"
மருதலிங்கம் பிரதீபன்
பிரதேச செயலர் வலிகாமம் கிழக்கு, கோப்பாய்
0 கருத்துகள்
வீரபத்திரர் பற்றிய கதைகள் உங்களது கட்டுரைகள் கவிதைகள் எமது இணையத்தளத்தில் வர விரும்பின் எமது Gmail முகவரிக்கு உங்கள் பெயரை இட்டு அனுப்பி வைக்கவும்.