கண்ணில் கோபம் கொண்டவனே வீரபத்திரரே
மண்ணில் யாவும் உன்னால் தானே வீரபத்திரரே
நெஞ்சில் வாழும் சோகம் தீர வீரபத்திரரே
கண்கள் நீயும் திறந்து பாரு வீரபத்திரரே
கல்வியங்காட்டினிலே வீரபத்திரரே
காளியுடன் வீற்றவனே வீரபத்திரரே
கல்வியங்காட்டினிலே வீரபத்திரரே
காளியுடன் வீற்றவனே வீரபத்திரரே
உமையாள் துணையே
உலகின் பொருளே
சிவனார் குருவே
சினமே திருவே
கல்வியங்காட்டு வீரபத்திரா சரணம்
கண்களில் வழியும் நீரை துடைக்க வரனும்
மண்டையோட்டு மாலைகள் அணிந்தவா சரணம்
மானுடம் வாழ மங்களம் என்றும் தரனும்
கல்வியங்காட்டு வீரபத்திரா சரணம்
கண்களில் வழியும் நீரை துடைக்க வரனும்
மண்டையோட்டு மாலைகள் அணிந்தவா சரணம்
மானுடம் வாழ மங்களம் என்றும் தரனும்
கண்ணில் கோபம் கொண்டவனே வீரபத்திரரே
மண்ணில் யாவும் உன்னால் தானே வீரபத்திரரே
நெஞ்சில் வாழும் சோகம் தீர வீரபத்திரரே
கண்கள் நீயும் திறந்து பாரு வீரபத்திரரே
அன்றொரு நாள் தக்கன் ஆணவம் தலைக்கேறி இருந்தான் சிவனை இகழ்ந்தான்
வேள்வியில் சிவம் வறுத்து வேண்டாத செயல் புரிந்து மகிழ்ந்தான் தக்கன் மகிழ்ந்தான்
சிவனாரின் அகந்தையை அழிப்பதற்காக சினமுடன் எழுந்தான் வீரபத்திரராக
தக்கனின் யாகத்தை தடுத்தே நிறுத்தி தரணியில் தர்மத்தை தழைக்கவே செய்தார்
உமையாள் துணையே
உலகின் பொருளே
சிவனார் குருவே
சினமே திருவே
கல்வியங்காட்டு வீரபத்திரா சரணம்
கண்களில் வழியும் நீரை துடைக்க வரனும்
மண்டையோட்டு மாலைகள் அணிந்தவா சரணம்
மானுடம் வாழ மங்களம் என்றும் தரனும்
கண்ணில் கோபம் கொண்டவனே வீரபத்திரரே
மண்ணில் யாவும் உன்னால் தானே வீரபத்திரரே
நெஞ்சில் வாழும் சோகம் தீர வீரபத்திரரே
கண்கள் நீயும் திறந்து பாரு வீரபத்திரரே
கல்வியங்காட்டினிலே பத்திரகாளியுடன் எழுந்த எங்கள் இறைவா
பாவங்கள் போக்கிடவே பக்தரை காத்தருளும் தலைவா எங்கள் தலைவா
எழுந்த கோபுரம் உன் புகழ் கூறும்
மலர்ந்த கேணியும் பிணிகளை தீர்க்கும்
பண் கூட்டி பாடலும் உனக்காய் தந்தோம்
பக்தன் என் பாடலை பரிவுடன் ஏற்பாய்
உமையாள் துணையே
உலகின் பொருளே
சிவனார் குருவே
சினமே திருவே
கல்வியங்காட்டு வீரபத்திரா சரணம்
கண்களில் வழியும் நீரை துடைக்க வரனும்
மண்டையோட்டு மாலைகள் அணிந்தவா சரணம்
மானுடம் வாழ மங்களம் என்றும் தரனும்
கண்ணில் கோபம் கொண்டவனே வீரபத்திரரே
மண்ணில் யாவும் உன்னால் தானே வீரபத்திரரே
நெஞ்சில் வாழும் சோகம் தீர வீரபத்திரரே
கண்கள் நீயும் திறந்து பாரு வீரபத்திரரே
கல்வியங்காட்டினிலே வீரபத்திரரே
காளியுடன் வீற்றவனே வீரபத்திரரே
கல்வியங்காட்டினிலே வீரபத்திரரே
காளியுடன் வீற்றவனே வீரபத்திரரே
உமையாள் துணையே
உலகின் பொருளே
சிவனார் குருவே
சினமே திருவே
கல்வியங்காட்டு வீரபத்திரா சரணம்
கண்களில் வழியும் நீரை துடைக்க வரனும்
மண்டையோட்டு மாலைகள் அணிந்தவா சரணம்
மானுடம் வாழ மங்களம் என்றும் தரனும்
கல்வியங்காட்டு வீரபத்திரா சரணம்
கண்களில் வழியும் நீரை துடைக்க வரனும்
மண்டையோட்டு மாலைகள் அணிந்தவா சரணம்
மானுடம் வாழ மங்களம் என்றும் தரனும்
0 கருத்துகள்
வீரபத்திரர் பற்றிய கதைகள் உங்களது கட்டுரைகள் கவிதைகள் எமது இணையத்தளத்தில் வர விரும்பின் எமது Gmail முகவரிக்கு உங்கள் பெயரை இட்டு அனுப்பி வைக்கவும்.