-->

இன்று 24.07.2020 ஆடிப்பூரம் தவற விடாதீர்கள்.

திருமண பாக்கியம் புத்திர பாக்கியம் நல்கும் ஆடிப்பூரம்.


ஆடி மாதம் என்றாலே பண்டிகைகள் தான்.  அதுவும் அம்மனுக்கு விசேடமான மாதம் ஆடிமாதம்.  இன்று (24.07.2020) ஆடிப்பூரம் தினமாகும். அது மட்டுமல்லாமல் இன்று நாக சதுர்த்தியும் ஆகும். அதன் சிறப்புக்களை முன்னைய கட்டுரையின் மூலம் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

ஆடிமாதத்தில் வரும் பூரம் நட்சத்திர தினம் ஆடிப்பூரம் ஆகும். இன்று அம்மன் அவதரித்த நாளாகும். அது மட்டுமல்லாமல் அம்பாளுக்கு வளையல் சாற்றும் தினமாகும்.  அம்மன் கோயிலில் கண்ணாடி வளையல்கள் வாங்கி,  அந்த வளையலை அம்மனுக்கு சாற்றி விட்டு கோயிலுக்கு வரும் பெண்களுக்கு அதை கொடுப்பார்கள்.

அம்மன் நித்ய கன்னி என்பதால் அம்மனுக்கு பிள்ளைப்பேறு, வளைகாப்பு என கிடையாது என்பது ஐதீகம்.  அதற்காக ஆடிப்பூரம் அன்றைக்கு அம்மனுக்கு வளையல் அணிவித்து இன்று வளைகாப்பு தினமாக பல ஆலயங்களில் கொண்டாடப்படுகிறது.

கோயிலில் அம்மனுக்கு சாற்றப்பட்ட வளையல்களை வாங்கி அணியும் திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் விரைவில் நடைபெறும்.  அதே போல் திருமணமாகியும் குழந்தைப் பேறு இல்லாத பெண்களுக்கு நல்ல மக்கட்பேறு கிட்டும் என்பது நம்பிக்கை.

இன்று அருகிலுள்ள அம்மன் கோயிலுக்கு சென்று அம்மனுக்கு கண்ணாடி வளையல்கள் வாங்கி கொடுப்பது மிகவும் புண்ணியம். அதுவும் இன்று நாக சதுர்த்தி. நாகம் என்றாலே நினைவுக்கு வரும் தெய்வம் அம்மன். நாகசொரூபி நாகராணி யாகவும் போற்றப்படும் அம்மனை இன்று வழிபட்டால் மிக்க சிறந்தது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்