குருகுல அதிபரின் ஆசியுரை
கல்வியங்காடு கிராமத்தில் சிறந்த பக்தி மிக்க பக்தர்கள் வணங்கித் துதிக்கும் தெய்வம் ஸ்ரீ பத்ரகாளி அம்பிகா சமேத வீரபத்ரர், அவருடைய தேவஸ்தானத்திற்கு பக்தர்களுடைய முயற்சியால் அழகுற அமைந்திருக்கிறது பஞ்சதுவார ராஜ கோபுரம்.
"மஹாசதாசிவாக்யஸ்ய பாதஸ்தானந்து கோபுரம்" என்று சிவாகமத்தில் கோபுரம் விதந்து கூறப்படுகிறது. இராஜகோபுரம் இறைவனுடைய பாதஸ்தானமாகக் கருதப்படுகிறது. ஆகவே இறைவன் திருவடிகளை முதலில் சேவிப்பது சாலச்சிறந்ததாகும். அதன் கும்பாபிஷேகம் தைத்திங்கள் 19ஆம் நாள் 01.02.2013 வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கிறது. இதன்பயனாக அடியார்கள், கிராம மக்கள் அனைவரும் வீரபத்ர ஸ்வாமியின் அனுக்கிரகம் பெற்றுவாழ ஆசீர்வதிக்கின்றேன்.
சிவஸ்ரீ தா.மகாதேவக்குருக்கள்
ஸ்ரீ கண்ணகா பரமேஸ்வரி தேவாலயம்.
இணுவில், சுன்னாகம்
0 கருத்துகள்
வீரபத்திரர் பற்றிய கதைகள் உங்களது கட்டுரைகள் கவிதைகள் எமது இணையத்தளத்தில் வர விரும்பின் எமது Gmail முகவரிக்கு உங்கள் பெயரை இட்டு அனுப்பி வைக்கவும்.