அருளாசிச் செய்தி
சிவனேயச் செவ்வர்களுக்கு,
கல்வியங்காட்டுப் பிரதேசத்தில் எழுந்தருளியிருந்து அருளாட்சிபுரியும் ஸ்ரீ பத்திரகாளி சமேத ஸ்ரீ வீரபத்திரருக்குப் புதிதாக இராஜகோபுரம் அமைக்கப்பட்டதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம். ஆன்ம ஈடேற்றத்தின் பொருட்டு நம்மால் அமைக்கப்பட்ட ஆலயத்தில் ஆண்டவன் எழுந்தருளுகின்றான். அவ் ஆலயம் மனிதனுடைய பல செயற்பாடுகளை உணர்த்தி நிற்கின்றன.
இவ்வகையில் ஆலயம் சாஸ்திர விதிக்கமைய பல கட்டுமான படிவங்களைக் கொண்டுள்ளது. இது கோபுரவாசல் தொடக்கம் மூலஸ்தானம் வரை மனிதனுடைய உடம்பிலுள்ள ஆதாரங்களை எடுத்துக்காட்டுகின்றன. ஆலயத்தின் பூரண அடையாளமான சூரலிங்கமாகிய இராஜகோபுரம் இவ்வாலயத்தில் அமைந்திருப்பது நிறைவை எடுத்துக்காட்டுகிறது. இதனால் "கோபுர தரிசனம் கோடி புண்ணியம்" என்றும் கோபுரத்தில் அமையும் சிற்பங்கள் யாவும் பூவுலகின் வாழ்க்கைத் தத்துவத்தை எடுத்துக் காட்டும். இச்சிறப்பு இவ்வாலயத்தில் அமைந்திருப்பது ஊருக்கும் மக்களுக்கும் பெருமையைத் தருவதாகும். இக்கும்பாபிஷேகத்தில் அனைவரும் தரிசித்து மண்ணில் நல்லவண்ணம் வாழ்வோமாக! இத்தரும காரியத்தை நிறைவேற்றியிருக்கும் அனைத்து அன்பர் களையும் இறைவன் ஆசிர்வதிப்பாராக.
0 கருத்துகள்
வீரபத்திரர் பற்றிய கதைகள் உங்களது கட்டுரைகள் கவிதைகள் எமது இணையத்தளத்தில் வர விரும்பின் எமது Gmail முகவரிக்கு உங்கள் பெயரை இட்டு அனுப்பி வைக்கவும்.