பாராட்டி வாழ்த்துகின்றோம்

 பாராட்டி வாழ்த்துகின்றோம்


ஆன்மாக்கள் ஓடுங்கும் இடம் ஆலயம் எனும் முதுமொழிக்கிணங்க சைவமும் தமிழும் தழைத்தோங்க அராலி கிழக்கு வாழ் வீரபத்திரரைக் குலதெய்வமாக வணங்கும் வாலைமுத்துவின் பேரனாகிய தவபாலசிங்கம் தவவீரசிங்கம் சிற்பக்கலையில் சிறந்து விளங்கும் சிற்பாசான் நல்லூர், கீரிமலை நகுலேஸ்வர இராஜகோபுரங்களையும் இன்னும் பல ஆலயங்களின் மூலஸ்தான கோபுரங்களையும், ஜேர்மனி போன்ற வெளிநாடுகளிலும் ஆலயங்கள் அமைத்துப் பெருமை சேர்த்து விளங்கும் சிற்பாசான் எமது ஆலயத்திற்கும் இராஜகோபுரம் அமைத்து அடியார்களை 'கோபுர தரிசனம் கோடி புண்ணியம்' பெறவைத்த கலைஞனுக்கு ஆசிகூறி, எம்பெருமான் திருவருள் பெற்று மென்மேலும் தழைத்து ஓங்க இறைவன் திருப்பாதங்கள் பற்றி வேண்டுகின்றோம்.

நன்றி

ஆலய திருப்பணிச்சபையினர், பரிபாலனசபையினர்,
ஸ்ரீ பத்திரகாளி சமேத ஸ்ரீ வீரபத்திரர் தேவஸ்தானம்,
கல்வியங்காடு

கருத்துரையிடுக

0 கருத்துகள்