ஆசிச் செய்தி - வி.பாஸ்கரன் செயலாளர். கட்டப்பிராய் முத்துமாரி அம்மன் தேவஸ்தானம்

கட்டப்பிராய் ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தான

ஆசிச் செய்தி


ஈழமணித் திருநாட்டின் வடபால் அமைந்த சிவபூமி எனப் போற்றப்படும் யாழ். மண்ணின் அழகிய சிற்றூர் கல்வியங்காடு, இப் பதியின் காராளர் சமூகத்தின் மத்தியில் கோயில் கொண்டருளியும் வேண்டுவார் நெஞ்சங்களிற்கெல்லாம் இறைவியும் ஈஸ்வரனுமாக இருந்து அருள்பாலித்தருளும் பத்திரகாளி சமேத வீரபத்திரப் பெருமானுக்கு நூதன பஞ்சதள இராஜகோபுர திருப்பணி நிறைவு பெற்று இன்றைய தினம் குடமுழுக்குக் காணுகின்ற பாக்கியம் எட்டியுள்ளது.

வீரபத்திரப் பெருமானின் மெய்யடியார்கள், தொண்டர்கள், பக்த ஜனங்கள் இன்னும் உலகெங்கும் பரந்துவாழும் கல்வியங்காட்டு வாழ் வீரபத்திர அடியவர்கள், அன்பர்கள் அனைவரும் எம் பெருமானின் புதிய இராஜகோபுர தரிசனத்தைக் கண்டு கழிக்கக் கொடுத்துவைத்தவர்கள். "தூல லிங்கம்" எனப் போற்றப்படும். கோபுரதரிசனத்தைப் பெறக் கோடி புண்ணியம் பயக்கும் என்ற ஆன்றோர் வாக்கிற்கமைய இந்நாளில் இறை அன்பர்கள் நல்லாசியோடும் பொன் பொருள்களை எல்லாம் வாரிவழங்கி இச்சிவப் பணியை நல்லறப் பணியாக மேற்கொண்டு இன்று வீரபத்திரரின் திருக்கதவைத் திறக்கப் பாடுபட்டு அயராது உழைத்த தொண்டு உள்ளங்கள் அனைவருக்கும் எல்லா நலன்களும் கிடைக்க எல்லாம் வல்ல வீரபத்திரப் பெருமானை வேண்டி அமைகின்றேன்.

வாழ்க சிவத்தொண்டு 

வாழ்க சிவநாமம் 

வாழ்க சிவபூமி 

வாழ்கசீர் அடியார் எல்லாம்.

சுபம்


வி. பாஸ்கரன்

செயலாளர்.

கட்டப்பிராய் முத்துமாரி அம்மன் தேவஸ்தானம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்