வாழ்த்துச் செய்தி - த. பாலசிங்கம் செயலாளர், பரிபாலனசபை

 செயலாளரின் வாழ்த்துச் செய்தி


கல்வியங்காடு ஸ்ரீ பத்திரகாளி சமேத ஸ்ரீ வீரபத்திரர் சுவாமி தேவஸ்தான இராஜகோபுர கும்பாபிஷேக மலர் வெளியீட்டுக்கு ஆசியுரை வழங்குவதில் ஆலய பரிபாலனசபை செயலாளர் என்றவகையில் பெருமிதம் அடைகின்றேன்.


"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்ற அருள்வாக்கிற்கு அமைய எம் கல்வியங்காட்டுக் கிராமத்திற்குக் கிடைத்த பெரும் வரப்பிரசாதமே. எல்லாம்வல்ல அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி சமேத ஸ்ரீ வீரபத்திரப் பெருமான் தேவஸ்தானம் மனம் உருகி வேண்டும் எம் மக்களுக்கு வேண்டிய வரங்களைக் குறைவில்லாமல் வாரி வழங்குவதில் வல்லவர் எம் வீரபத்திரப் பெருமான். அப்படிப்பட்ட எமது வீரபத்திரர் ஆலயத்திற்குச் சித்திரத்தேர் தீர்த்தக்கேணி எனச் சகலதும் நிறைவாகக் காணப்பட்டபோதிலும் எமது ஆலயத்திற்கு இதுவரை காலமும் ஓர் இராஜகோபுரம் அமைக் கப்படாமை பெரும் குறையாகவே காணப்பட்டது.


"கோபுர தரிசனம் கோடி புண்ணியம்" என்றவாக்கிற்கு இணங்க எமது மக்களுக்கும் அப்புண்ணியம் சேர்வதற்காக எவ்வளவோ கஸ்ரத்தின் மத்தியில் கல்வியங்காடு ஞானபாஸ்கரோதய கலாசார ஒன்றியமும் கனடா வாழ்மக்களும் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் கல்வியங்காட்டு மக்களாலும் எமது கிராம மக்களாலும் வழங்கப்பட்ட அன்பளிப்புக்களினாலும் அழகிய சிற்ப வேலைப் பாடுகளுடன் கூடிய ஐந்து அடுக்கு இராஜகோபுரமானது எம்பெருமான் ஆலயத்திற்குக் கட்டி முடிக்கப்பட்டுள்ளமை மனதிற்குப் பெரும் மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் கொடுக்கின்றது. இவ் இராஜகோபுரமானது ஆலயத்திற்குப் புதுப்பொலிவினைக் கொடுக்கின்றது.


த. பாலசிங்கம்

செயலாளர், பரிபாலனசபை.

கருத்துரையிடுக

0 கருத்துகள்