வாழ்த்துச் செய்தி
யாழ்ப்பாணம் கல்வியம்பதி அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி சமேத ஸ்ரீ வீரபத்திரப் பெருமானின் இராஜ கோபுரக் கும்பாபிஷேக மலர் வெளியிடு வதில் மக்கள் அனைவரும் மன மகிழ்வுகொள்கி றார்கள்.
"கோபுர தரிசனம் கோடி புண்ணியம்" என்ற வரிகள் பக்த கோடிகளின் வாயில் ஒலிக்கும்பொழுது அருள்பெருகி, அன்புமழை பொழியும். "ஆலயம் தொழுவது சாலவும் நன்று" சைவமும் தமிழும் தழைக்க நாயன்மார்கள் திருமுறைகள், திருமந்திரங்கள் அருளினார்கள். அடியார்கள் மனங்களில் நிற்கும்போது உள்ள உணர்வுகள் கோபுர நிழலில் நிற்கும்போது உணர்வார்கள். அந்த அருள் இன்று' எம்பெருமானின் ஆலயத்தில் அனைவருக்கும் கிடைத்துள்ளது.
நீண்ட நாட்களாக எமது அடியார்களும், திருப்பணிச் சபையினரும் எம்பெருமான் வீற்றிருக்கும் ஆலயத்தில் இராஜ கோபுரம் எழுப்பவேண்டுமென விரும்பிக் கொண்டிருந்தார்கள். அந்த விருப்பம் ஐந்து தளம்கொண்ட இராஜகோபுரமாகக் கம்பீரமாக எழுந்து நிற்கின்றது. கிராம மக்கள், வெளியூர் மக்கள், வெளிநாட்டு உறவுகள் அனைத்து அன்பர்களினதும் நிதி உதவியும் பொருள் உதவியும் அடியார்களின் பக்தி பூர்வமான முயற்சியுமே இந்த இராஜகோபுரம் எழக் காரணமாகும். இவ்வாலயம் திருப்பணிச் சபையின் தலைவர் என்றமுறையில் இதில் ஈடுபட்டுக்கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் எனது பெருநன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
ஓர் ஆலயத்தில் 'இராஜகோபுரம்' முக்கியமானது. கோயில் வாயில் எனப்படும் பெருமை இதற்கு உள்ளது. "வாய் கோபுரவாசல்" என்றார் திருமூலர். அழகிய சிற்பங்கள் புராண வரலாறுகளைக் காட்டக் கோபுர அமைப்பு தூலலிங்க தரிசனத்தைத் தெரிவித்து நிற்கிறது.
இக்கோபுர அமைப்பு வேலைகள் அனைத்தையும் செய்த சிற்ப சிரோன்மணி த தவவீரசிங்கம் அவர்களுக்கும் அவரின் தொண்டர்கள் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றியை வழங்கு கின்றேன். ஆலய அனைத்து குருமணிகளுக்கும் சிவாச்சார்யார்களுக்கும் விழாவில் கலந்துகொள்ளும் பெரியவர்களுக்கும் அருளுரை வழங்கியவர்களுக்கும் நன்றிகள்.
தைத்திங்கள் 19ஆம் நாள் வெள்ளிக்கிழமை ஒரு பொன் நாளாக அமைகிறது. இவ்வாலயத்தில் இராஜகோபுர மஹாகும்பாபிஷேகம் நிகழும் நாள் இந்நாளில் சைவ அன்பர்கள் அனைவரும் இவ்விழாவில் கலந்து கண்ணினால் அவர் விழாப் பொலிவுகண்டு அருள்பெறவேண்டுமென வாழ்த்துகின்றேன்.
0 கருத்துகள்
வீரபத்திரர் பற்றிய கதைகள் உங்களது கட்டுரைகள் கவிதைகள் எமது இணையத்தளத்தில் வர விரும்பின் எமது Gmail முகவரிக்கு உங்கள் பெயரை இட்டு அனுப்பி வைக்கவும்.