வாழ்த்துச் செய்தி - செ. இராசலிங்கம் தலைவர் ஆலய பரிபாலனசபை 2013

 பரிபாலனசபைத் தலைவரின்

வாழ்த்துச் செய்தி


எல்லா வளமும் நிறைந்த யாழ். திருநாட்டில் வடபால் சகல வளம்கொண்ட கல்வியம்பதி என்னும் கல்வியங்காட்டில் வீற்றிருந்து அடியவர்கட்கு அருள்பாலிக்கும் எம்பெருமான் ஸ்ரீ பத்திரகாளி சமேதர வீரபத்திரப் பெருமானுக்கு அடியவர்களின் பெருமுயற்சியில் பஞ்சதள இராஜகோபுரம் அமைக்க முயற்சிகளெடுத்து உள்ளூரிலும், வெளியூர்களிலுமுள்ள அடியவர்களின் நிதி உதவியால் நிறைவு பெற்று தைத்திங்கள் 18ஆம் நாள் (31.01.2013) வியாழக்கிழமை) மாலை கிரியைகள் ஆரம்பமாகித் தைத்திங்கள் 19ஆம் நாள் (01.02.2013 வெள்ளிக்கிழமை) காலை கும்பாபிஷேகம் நடைபெற எம்பெருமான் திருவருள் பாலித்துள்ளார்.


அடியவர்கள் யாவரும் அப்பெரு விழாவில் பங்குபற்றி எம்பெருமானுடைய திருவருளைப் பெற்றுச் செல்லுமாறு வேண்டி நிற்கின்றோம். மஹா கும்பாபிஷேகம் இனிது நிறைவேற மேலும் வரும் திருப்பணிகளுக்கு ஊக்கமளித்து உதவ இறையருள் வேண்டி நல்லாசி கூறுகின்றேன்.


செ. இராசலிங்கம்

தலைவர்.

ஆலய பரிபாலனசபை.

கருத்துரையிடுக

0 கருத்துகள்