வாழ்த்துச் செய்தி - பா. செந்தில்நந்தன் பிரதேச செயலர் நல்லூர்

 வாழ்த்துச் செய்தி


"கோயிலில்லா ஊரிற் குடியிருக்க வேண்டாம்" என்ற ஆன்றோர் வாக்கிற்கமைய யாழ்ப்பாணத்திலே சைவசமயிகள் வாழும் பிரதேசங்கள் எங்கும் கோயில்கள் அமைந்திருப்பதைக் காணலாம். அந்தவகையிலே நல்லூர் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட திருநெல்வேலி வடகிழக்கு கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள ஸ்ரீ பத்திரகாளி சமேத ஸ்ரீ வீரபத்திரர் தேவஸ்தானத்தின் இராஜகோபுரம் கும்பாபிஷேகப் பெருவிழா இடம்பெறுவது அறிந்து மகிழ்வடைகின்றேன்.

ஆலயங்களில் நடைபெறும் கிரியைகளில் தலையானது கும்பாபிஷேகமாகும். அத்துடன் இராஜகோபுர கும்பாபிஷேகக் கிரியைகளைக் காணும் பக்தர்களும், தொண்டுகளில் ஈடுபடும் அடியார்களும் பெரும் பாக்கியசாலிகளாவர். இந்தவகையிலே கல்வியங்காடு கிராமத்தைச் சேர்ந்த பக்தர்களும் ஆலயத் தொண்டர்களும் தமது அரிய சேவையினால் இத்திருத்தலத்தின் இராஜ கோபுரத்தை அமைத்து கும்பாபிஷேகப் பணியை மேற் கொண்டுள்ளார்கள். மேலும் இப்பணியில் ஈடுபடும் இவ்வாலய பரிபாலன சபையினரும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

இந்தவகையில் ஸ்ரீ பத்திரகாளி சமேத ஸ்ரீ வீரபத்திரர் தேவஸ்தானத்தின் இராஜகோபுர கும்பாபிஷேகப் பெருவிழாவில் பங்கெடுக்கும் அடியார்களுக்கு இறை அனுக்கிரகம் கிடைக்க வீரபத்திரப் பெருமானை வேண்டிக்கொள்வதுடன், இறைவனின் திருவருளினால் கும்பாபிஷேகப் பெருவிழா இனிதே இடம்பெற வாழ்த்துகின்றேன்.

"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்"

பா. செந்தில்நந்தன்

பிரதேச செயலர் - நல்லூர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்