செஞ்சொற்செல்வரின் ஆசியுரை

 செஞ்சொற்செல்வரின் ஆசியுரை

கடவுள் பக்தியும், கலை ஆர்வமும், கல்வி ஆர்வமும் மிக்க மக்கள் வாழும் திருவூர் கல்வியங்காடு. இத் திருவூரில் பாரம்பரிய கிராமிய வழிபாட்டு மரபில் பேணிக்காக்கப்பட்ட வீரபத்திரர் கோவில் இன்று பெருவளர்ச்சி கண்டுவருகிறது. இத்திருக்கோவிலில் அழகான இராஜகோபுரம் அமைக்கப்பட்டு மஹாகும்பாபிஷேகச் சிறப்புமலர் ஆவணமாக வெளியிடுவது அறிந்து மிகவும் ஆனந்தமடைகின்றேன்.

"கோபுரதரிசனம் கோடி புண்ணியம்" என்பது ஆன்றோர் வாக்கு. திருக்கோவிலின் மேன்மையையும் ஆகமச் சிறப்பையும், அர்த்தமுள்ள தத்துவத்தையும் வெளிப்படுத்துவது திருக்கோபுரம். தமிழ் வேந்தர் காலத்தில் சைவத்திருக்கோவில்கள் பல பெருங் கோபுரங்களுடன் காட்சியளித்ததாக வரலாறு கூறுகிறது.

எம் மண்ணில் இன்று சிறிய கோவில்கள் முதற் பெரிய கோவில்கள்வரை அடியவர்களின் காணிக்கையால் அழகாக வளர்த்தெடுக்கப்பட்டு வருவது நாம் செய்த புண்ணியப் பயன் அருள் நிறைந்த வீரபத்திரப் பெருமானின் இராஜகோபுரக் கும்பாபிஷேகத்துடன் எம்மண்ணில் நிரந்தர அமைதி ஏற்படப் பிரார்த்தித்து, நல்லாசிகளைத் தெரிவித்து அமர்கின்றேன்.


கலாநிதி ஆறு.திருமுருகன்

தலைவர் - ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம்

தலைவர் - சிவபூமி அறக்கட்டளை.

கருத்துரையிடுக

0 கருத்துகள்