ஆசியுரை
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தில் தோன்றிய மொழிகளில் ஒன்று தமிழ் என்று சொல்வார்கள் ஆன்றோர்கள். அப்படிப்பட்ட மொழிக்குச் சொந்தமானது சைவ சமயம் அச்சமயத்துக்கு முழுமுதற் தெய்வமாக வணங்கப்படுவது சிவன். அருவுருவமாகக் காட்சிதரும் தெய்வமாக விளங்குவது சிவலிங்கத் திருமேனி. இச்சிவலிங்கத் திருமேனியில் 25 மூர்த்தங்கள் சொல்லப்படுகின்றன. இந்த மூர்த்தங்களில் ஒன்றுதான் வீரபத்திரப்பெருமான்.
ஒருமுறை தக்கன் வேள்வி நடத்தும்போது சிவனை அவமதித்து அழைப்பின்றி தனது யாகத்தை நடத்தி வந்தான். இதனால் கோபங்கொண்ட சிவபிரான் வீரபத்திரப் பெருமானைத் தோற்றுவித்துத் தக்கன் யாகத்தை அழித்து வரும்படி உத்தர விட்டார். அப்படியே வீரபத்திரரும் செய்தார். இதனாலே இவ் வீரபத்திரர் வழிபாடு பூமியில் தோன்றியது எனலாம்.
எனது குலதெய்வமாக வணங்கப்படும் வீரபத்திரப் பெருமானுக்கு ஒரு இராஜகோபுரம் அமைத்துப் பார்க்கவேண்டும் என்பது எனது அவா. எனது அவாவின் வெளிப்பாட்டினை எம்பிரான் நிறைவேற்றிக் காட்டியுள்ளார். இந்த ஆலயம் மூன்று தலைமுறையைக் கடந்து இன்று நான்காவது தலைமுறையினர் எம்பிரானைப் பூஜிக்கின்ற வாய்ப்பு எனக்கும் கிட்டியுள்ளது. இந்த இராஜகோபுரக் கும்பாபிஷேகத்தினை எனது தலைமையில் செய்து முடிக்க நான் என்ன பாக்கியம் செய்தேனோ எல்லாம் இறைவன் விரும்பியபடி நடக்கின்றது.
இந்த ஆலயத்தினை எமது எதிர்கால சந்ததியினர் மென்மேலும் நிர்வாகத் தன்மைகளை அழகுற நடாத்தி இறையருள் பெற்றுவாழ ஆசிகூறி அமர்கின்றேன்.
0 கருத்துகள்
வீரபத்திரர் பற்றிய கதைகள் உங்களது கட்டுரைகள் கவிதைகள் எமது இணையத்தளத்தில் வர விரும்பின் எமது Gmail முகவரிக்கு உங்கள் பெயரை இட்டு அனுப்பி வைக்கவும்.